302. பஸ் எரிப்பு.. தூக்கு தண்டனை.. அ·ப்சல் et al
செல்வி ஜெயலலிதாவை கைது செய்தபோது நடந்த தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் பலியான 3 அப்பாவி மாணவிகளின் குடும்பங்களின் விடா முயற்சியின் பலனாக, சம்பந்தப்பட்ட 3 முக்கிய (அதிமுக) குற்றவாளிகளுக்கு, தூக்கு தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டு, வழக்கின் முதல் கட்டம் முடிவுக்கு வந்துள்ளது. குற்றவாளிகள் இனி, உயர் மற்றும் உச்சநீதி மன்றங்களில் மேல் முறையீட்டுக்காகச் செல்லலாம். நாட்டை சீரழிக்கும் தீவிரவாதத்திற்கு துணை போனதற்காக, உச்சநீதி மன்றமே அ·ப்சலுக்கு தூக்கு தண்டனை வழங்கியபோது, வலைப்பதிவுலக அருந்ததி ராயின் சிஷ்யகோடிகள், அத்தீர்ப்புக்கு பயங்கர ஆட்சேபம் தெரிவித்து, கண்டனப் பதிவுகளை எழுதித் தள்ளினர். இப்போது மூச்சு பேச்சில்லாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.
அ·ப்சல் தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததால் உயிரிழந்தவர்கள் மற்றும் பஸ் எரிப்பில் அநியாயமாக பலியான மாணவிகள் ஆகிய இரு தரப்பினருமே அப்பாவிகள் தாமே ! அ·ப்சல் 'காஷ்மீர் சுதந்திரப் போராட்ட வீரர்' என்பதால், அவருக்கும் காஷ்மீர் போலவே special status-ஆ ??? பஸ்ஸை எரித்த மூவரும், 'ஜெயலலிதா சுதந்திரப் போராட்ட வீரர்கள்' என்பதால், அவர்களை தூக்கிலிட்டால் OK-வா ??? பாராளுமன்றத்தைக் காக்கும் பொருட்டு உயிரிழந்த பாதுகாப்புப் படைவீரர்களின் உயிர் எவ்வகையில் குறைந்தது ? தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட, அதிமுக கட்சியைச் சேர்ந்த அம்மூவரும் உத்தமர்கள் என்று எதுவும் எழுத வரவில்லை. ஏன் இந்த selective amnesia என்று மட்டும் கேட்க விரும்புகிறேன்.
மரண தண்டனை எதிர்ப்பாளர்கள், பஸ் எரிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து அதிகம் வாய் திறக்காமல் இருப்பதற்கு, அவர்கள் சிந்தனை ஓட்டத்தில் உள்ள போலித்தனம் தான் காரணம் என்று தோன்றுகிறது. மேலும், எதிர்ப்பதால் சாதகத்தை விட பாதகமே அதிகம் (மாணவிகளை உயிரோடு எரித்த குற்றவாளிகளுக்கு ஆதரவு தருவதால் ஏற்படும் விளைவுகளைச் சொல்கிறேன்!). ஆனால், அ·ப்சல் விவகாரத்தில், காஷ்மீர் பிரச்சினை, இந்திய ராணுவத்தின் மனித உரிமை அத்துமீறல்கள், இந்திய அரசின் அராஜகத்திற்கு எதிரான நிலைப்பாடு, பொதுப்புத்திக்கு அப்பால் சிந்திக்கும் இந்த மனித உரிமைக் காவலர்களின் 'தனித்துவமான சிறப்பு' ஆகியவை முன்னிறுத்தப்பட்டு, பிரகாசமான ஊடக வெளிச்சமும், அதனால் விளம்பரமும் கிடைத்து விடுகிறது.
ஒரு தீவிரவாதச் செயலால் (குண்டுவெடிப்பு) விளையும் உயிரிழப்பு ஏற்படுத்தும் உடனடி பாதிப்பு, அவ்வழக்கில் தீர்ப்பு வெளிவரும்போது இருப்பதில்லை. அதனால், ஊடகங்களில் அந்த உயிரிழப்புக்கு, அச்சமயத்தில் அவ்வளவு முக்கியத்துவமும் கிடைப்பதில்லை. இதனால் மரண தண்டனை எதிர்ப்பாளர்களுக்கு சாதகமான சூழலும் அமைந்து விடுகிறது. ஆனால், பஸ் எரிப்பு விவகாரத்தில் நிலைமை அப்படியில்லை.
இந்த இரண்டு வழக்குகளுக்கும் மற்றொரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக எனக்குப் படுகிறது. தீவிரவாதிகளுக்கு துணை போன அ·ப்சலுக்கு (அவர் திட்டம் தீட்டாவிட்டாலும்), தீவிரவாதிகள் மேற்கொள்ளவிருந்த தாக்குதலின் வீரியமும், ஏற்படவிருந்த பாதிப்பும், பலர் உயிரிழக்கும் சாத்தியமும், செய்கையின் பயங்கரமும் தெரிந்தே இருந்தது ! ஆனால், தங்கள் தலைவிக்காக, தலைக்கேறிய ஆத்திரத்தில் பஸ் எரிப்பை முன் நின்று நடத்திய மூவரும், திட்டம் எதுவும் தீட்டி, அம்மாணவிகளைக் கொன்றதாகக் கூற முடியவில்லை ! பஸ்ஸில் இருந்தவர்கள் எதிர்க்கட்சிக்காரர்களும் அல்லர். மாணவிகளை எரித்துக் கொல்ல வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக இருந்திருக்க முடியாது என்று நம்ப வாய்ப்புள்ளது.
ஆர்ப்பாட்டங்களின்போது, பொதுச்சொத்துக்களுக்கு நாசம் விளைவிப்பதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். பொதுமக்களை பஸ்ஸை விட்டு இறங்கச் சொல்லி விட்டு பின் அதை நாசப்படுத்துவது தான் பெரும்பாலும் நடைபெறும். இந்த சம்பவத்தில், mob mentality-யின் தீவிரமும் அவசரமும் மூன்று இளந்தளிர்கள் கருகக் காரணமாகி விட்டன. இருந்தாலும், இம்மூவருக்கும் வழங்கப்பட்ட தண்டனை, இது போன்ற கொடுமைகள் மீண்டும் நிகழாமல் இருக்க ஒரு deterrent-ஆக இருக்கும் என்ற வகையிலும், முன்வைக்கப்பட்ட வாக்குவாதங்களையும் சாட்சியங்களையும் ஆய்ந்து நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பு என்ற வகையிலும், இந்தத் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றே.
என்றென்றும் அன்புடன்
பாலா
தொடர்புடைய சுட்டிகள்:
முகமூடி பதிவு
செல்வன் பதிவு
*** 302 ***
11 மறுமொழிகள்:
As usual, my comment will be the first comment for any of my postings :)
அப்ப ஞாயப்படி பார்த்தால் தூக்கு தண்டனையை இந்த மூவருக்கும் ரத்து செய்யலாம் என்கிறீர்கள்!
நீங்கள் எல்லாம் பதிவு போட்டு என்ன ஆகப்போவுது சாரே, அப்சலுக்கு தூக்கு கொடுக்கக் கூடாது என்று குதி குதியாய்க் குதித்தவர்கள், பதிவு மேல் பதிவு போட்டு சைடு கேப்பில் ஹிந்து அடிப்படைவாதி, இந்துத்வா வாந்தி எடுத்தவர்கள் எல்லாம் எங்கே...?
முக்கியமாம அசுரன், ரோசாவசந்த், வக்கீஈல் பிரபு ராஜதுரை போன்றவர்கள் பதில் சொல்லியாகவேண்டிய கேள்வியை அன்றே இதே வஜ்ரா கேட்டான்.
இன்று அப்சலுக்கு தூக்கு வழங்கக் கூடாது என்பதற்காக தூக்கே வேண்டாம் என்று சொல்பவர்கள் நாளை வேறொரு மனிதனுக்காக இதே மாதிரி போராடுவார்களா ? ஆம் என்றால் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட தூக்குகளுக்கு ஏன் போராடவில்லை, இல்லை என்றால் ஏன் இல்லை ?
பாலா,
இந்தப் பதிவைப் படிக்க ஆரம்பித்த போது பின்னூட்டத்தில் எழுத வேண்டும் என்ரு நினைத்ததெல்லாம் படித்து முடிக்கும் போது மாறி விட்டது
"ஆனால், தங்கள் தலைவிக்காக, தலைக்கேறிய ஆத்திரத்தில் பஸ் எரிப்பை முன் நின்று நடத்திய மூவரும், திட்டம் எதுவும் தீட்டி, அம்மாணவிகளைக் கொன்றதாகக் கூற முடியவில்லை ! பஸ்ஸில் இருந்தவர்கள் எதிர்க்கட்சிக்காரர்களும் அல்லர். மாணவிகளை எரித்துக் கொல்ல வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக இருந்திருக்க முடியாது என்று நம்ப வாய்ப்புள்ளது.
என்று நீ குறிப்பிட்டது சரியல்ல...எல்லாரையும் கொளுத்துங்கடா..அப்பத்தான் அறிவு வரும் என கத்திக்கொண்டே..வெளியில் நின்றிருந்தவர்கள் விட்டு விடக் கோரி கதரியதையும் பொருட் படுத்தாமல் உள்ளே மாணவிகளை வைத்து "தெரிந்தே" எரித்திருக்கிரார்கள் "Cold blooded murder " நீதிபதி தூக்குதண்டனையளிக்க இதுவும் ஒரு முக்கிய காரணம் :( வேரென்ன சொல்ல " தூக்குல போட்டுருங்கப்பா "" என்பதைத்தவிர.
பாலா,
திட்டும் போது கள்ள மெளனம் சாதிக்கும் திருட்டு அரசியல் கட்சிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
வஜ்ரா,
கருத்துக்களுக்கு நன்றி. மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் என்று இந்த மனித உரிமைக் காவலர்கள் கூறுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மேலும், அக்காவலர்கள் சில ஸ்பெஷல் மனிதர்களின் உரிமைக்காக மட்டுமே குரல் கொடுத்துப் போராடுவார்கள் :( அது தான் அவர்கள் போலித்தனம் !
சங்கர்,
நீங்கள் கூறுவது போல் 'தெரிந்தே' எரித்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், 2 விஷயங்களைப் பார்க்க வேண்டும்.
1. இதை premeditated and planned murder (நான் கூறுவது "திட்டம் எதுவும் தீட்டி") என்று ஒரேடியாகச் சொல்ல முடியாது. நானே 'mob mentality'யின் தீவிரமும், அவசரமும் தான், தலைக்கேறிய ஆத்திரத்தை வரவழைத்து, இந்தக் கொடுமைக்குக் காரணமாக அமைந்து விட்டது என்று பொருள்படத் தான் எழுதியிருக்கிறேன்.
2. ஆனால், அ·ப்சலுக்கு தீவிரவாதிகளின் திட்டம் பற்றி தெளிவாகத் தெரிந்திருந்தது. அதனால், சர்வ நிச்சயமாக, he was party to a well planned and deliberate attack that killed many people.
மேல் முறையீட்டின் போது, உயர்/உச்ச நீதிமன்றங்கள் என்ன சொல்லப் போகின்றன என்று பார்க்க வேண்டும்.
***********************
அம்மூவரின் பைத்தியக்காரத்தனமான நோக்கம் பஸ்ஸை எரித்து அம்மாவின் பாராட்டை பெறுவதுதான். இதில் அந்த அப்பாவிகள் மாட்டிக்கொண்டார்கள்.
இதற்குப் பிறகாவது நடந்த தவறுக்கு வருந்தாமல் சட்டத்தை வளைக்கப்பார்த்தவர்களுக்கு இந்த தண்டனை சரியானதே.
ஆனால் அஃப்சலின் நோக்கமே தலைவர்களின் கொலைதானே. அதன்மூலம் நாட்டினல் ரத்த ஆறு ஓடவேண்டுவதுதானே.
இரண்டையும் ஒப்பிடுவது சரியல்ல.
மிகச் சரியான பதிவு. இது தொடர்பான என் பதிவு இங்கே.
ராஜநாகம், ஓகை,
வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
Good post ... Valid arguments ...
Checking whether Comments' section of this post, when updated, is getting reflected in thamizmaNam also ????
//இருந்தாலும், இம்மூவருக்கும் வழங்கப்பட்ட தண்டனை, இது போன்ற கொடுமைகள் மீண்டும் நிகழாமல் இருக்க ஒரு deterrent-ஆக இருக்கும் என்ற வகையிலும், முன்வைக்கப்பட்ட வாக்குவாதங்களையும் சாட்சியங்களையும் ஆய்ந்து நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பு என்ற வகையிலும், இந்தத் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றே.
//
சரி தான் ...
Post a Comment